இணையவழி நிதி மோசடி; சீனர்கள் 20 பேர் இலங்கையில் கைது!

இணையவழி நிதி மோசடி; சீனர்கள் 20 பேர் இலங்கையில் கைது!

editor 2

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் சீன பிரஜைகள் 20 பேர் இன்று பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், 332 USB கேபிள்கள், 17 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இணையவழி நிதி மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளுடன் இந்தக் குழுவுக்கு தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, 30 சீன பிரஜைகள், 04 இந்திய பிரஜைகள் மற்றும் 06 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டு பிரஜைகள் ஹங்வெல்லயில் இரண்டு இடங்களில் கைதுசெய்யப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், இந்த வாரம் திங்கட்கிழமை மேலும் 19 சீன பிரஜைகள் நாவலயில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.

இதுவரை இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 80 வெளிநாட்டவர்கள் கடந்த சில தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article