வடகிழக்கில் இருத்து எமது கட்சிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (08) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இதன் போது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டு பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் உள்ள 05 தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ள நிலையில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றோம்.
75 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில் தற்போது ஒரு ஆட்சி மாற்றத்தினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களும் கூட தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை.
2009 பிரபாரன் தலைமையிலான உரிமை போராட்டம் நிறைவுற்றதும் தமிழ் தேசம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினால் தொழிவுபடுத்தப்பட்டு வருவதாலேயே தமிழ் தேசியம் இன்றும் உயிருடன் இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமக்கு மேற்கொள்ளப்பட்டது மனித உரிமை மீறல் தொடர்பாக 15 தடவைகள் அங்கு சென்று உரக்கக் கூறியது எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.
அத்தேடு கொழும்பிலோ வெளிநாட்டிலோ எமக்காக தூதுவர்களிடமோ, ஏனையவர்களிடமோ 13 தீர்வுக்கான ஆரம்பபுள்ளி அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இன நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சமஸ்டியே தீர்வு என கூறும் ஒருவர் எமது தலைவர் மாத்திரமே.
மட்டக்களப்பு அம்பாரை மற்றும் ஏனைய மாவட்டங்களில் எமது மக்களுக்கான போராட்டங்களில் எமது தலைவர் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுமுள்ளார்.
மயிலத்தமடுவிற்கு கூட எமது தலைவர் வருகை தந்த போது பௌத்த பிக்குவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அங்கு சிங்கள மயமாக்கல் மேற்கொள்ள முயற்சித்த போது எமது தலைவர் முன்னிற்று செயற்பட்டவர்.
வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.
தென் தமிழ் ஈழம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்மரும் உங்களது பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஒழிக்கப்பட வேண்டும அதற்காக எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.