அருந்தவபாலன் – மணிவண்ணன் இழுபறி; வேட்பாளர் நியமனத்தில் தாமதம்?

அருந்தவபாலன் - மணிவண்ணன் இழுபறி; வேட்பாளர் நியமனத்தில் தாமதம்?

editor 2

முதன்மை வேட்பாளர் விவகாரத்தால் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் தெரிவு இழுபறி நிலைமையில் உள்ளதாக அறிய வருகின்றது.

கடந்த 30 ஆம் திகதி திங்கட்கிழமை கூடிய தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை தனித்து தமது மான் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்தது.

அத்துடன க.அருந்தவபாலனை முதன்மை வேட்பாளராக நியமிப்பது என்றும்
தீர்மானித்தது.

எனினும், தமிழ் மக்கள் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினரான அருந்தவபாலன் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் கட்சியை
விட்டு விலகியிருந்தார். இந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து தலைமையுடனான முரண்பாட்டால் வெளியேறிய மணிவண்ணன் தரப்பினர் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டனர்.

கட்சியின் மத்திய குழு முதன்மை வேட்பாளரை தீர்மானித்த பின்னர், கட்சித் தலைமையுடன் மணிவண்ணன் தரப்பு நடத்திய பேச்சைத் தொடர்ந்து முதன்மை வேட்பாளர் யார் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதில் கட்சித்தலைமை தாமதம் காட்டி வருகின்றது.

இந்த நிலையில், கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு
வினர் அருந்தவபாலனை முதன்மை வேட்பாளராக நியமிக்க வேண்டும்
என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் கட்சியின் வேட்பாளர்களை தெரிவதற்கான குழு கட்சியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் கூடியதாக அறிய வருகின்றது.

ஆனால், முதன்மை வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து இணக்கம் எதுவும் எட்டப்படாமல் கூட்டம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

Share This Article