சங்கு சின்னத்தில் போட்டி; ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

சங்கு சின்னத்தில் போட்டி; ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

editor 2

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

எனினும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க தமக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிவில் சமூகம் கேட்டுள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிவில் சமுகத்துக்கும் இடையே நேற்று கலந்துரையாடல் நடந்தது.

நேற்று முன்தினம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. கலந்துரையாடலுக்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சென்றிருந்தனர்.

எனினும் சிவில் சமூகம் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.

நேற்றுமுன்தினம் அவர்கள் கலந்துரையாடலுக்கு வருவதாக கூறியிருந்தனர்.

நேற்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.

இதில் சிவில் சமூகத்தினருக்கு ஆட்சேபனையிருக்கவில்லை என்றும், எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது, பிரசாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட ஏதாவதொரு நடவடிக்கையை மேற்கொள்வதா என இதுவரை தீர்மானிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பதை தீர்மானிக்க தமக்கு
இரண்டு நாட்கள் அவகாசம் தேவையென சிவில் சமூகத்தினர்
குறிப்பிட்டனர இந்த நாட்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது தேர்தல் ஏற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே. சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா மற்றும் சிவில் சமுகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Share This Article