வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி!

வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி!

editor 2

வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தெனியாய – மொரவக்க பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

மேலும், நாங்கள் கூறியதை போன்றே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும், தற்போது சில வர்த்தகர்களிடம் கலந்துரையாடிய போது, சிறந்த முறையில் வர்த்தகம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டனர்.

இதன்படி, எங்களைத் தூற்றுகின்ற சிலரும் தற்போது நன்மையடைகின்றனர். 

அத்துடன் வர்த்தகர்களையும் விவசாயிகளையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தற்போதைய சந்தை முறைமை போதுமானதாக இல்லை என எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவரும் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். 

எனினும் அனுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதாயின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அவசியமாகும். 

எனவே, இந்த பரஸ்பர முரண்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article