இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் கனடாவின் அரசமைப்புக்கு உட்பட்டது என்று அந்த நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அத்துடன், அதற்கு எதிராக இலங்கை சார்பான அமைப்பு தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்துள்ளது.
கனடாவின் கீழமை நீதிமன்றம் ஒன்று இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்புக்கு உட்பட்டது என்று கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இலங்கை – கனடா செயல்பாட்டு கூட்டமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.
கனடா அரசாங்கம் தனது அதிகாரத்துக்கு அப்பால்பட்ட விதத்தில் செயல்படுகின்றது. கருத்து சுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு, தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத் துகளை முடக்குவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்று
தெரிவித்திருந்தது. எனினும், அந்த அமைப்பின் வேண்டு கோளை நிராகரித்துள்ள ஒன்ராறியோ மேல்முறையீட்டு நீதிமன்றம், ‘இனப்படு கொலை கல்வி வாரச்சட்டம்
கனடாவின் அரசமைப்புக்கு உட்பட்டது. அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது.
இந்த சட்டம் சிங்கள – பௌத்தர்களுக்கு எதிரான வெளிப்படையான இன வேறுபாட்டை கொண்டுள்ளது என ஹேவகே கூறியிருப்பதை நாங்கள் நிராகரிக்கின்றோம்’, என்று கனடாவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் முன்னுரையில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கைகள் என குற்றம்சாட்டப்படும் கொள்கைகள் சிங்கள – பௌத்தமையப்படுத்தப்பட்டவை என்றே குறிப்பிடப்படுவதாகவும்
சிங்கள – பௌத்தர்கள் ஓர் இனக்குழுவாக அதற்கு பொறுப்பாளிகள் தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.