கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் சிறுவர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நேற்று திறந்து வைக்கப்பட்ட இந்த நீதிமன்றம் நாட்டின் மூன்றாவது சிறுவர் நீதிமன்றமாகும். முதலாவது நீதிமன்றம் கொழும்பு பத்தரமுல்லையிலும், இரண்டாவது நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் உள்ளன.
சிறுவர் நீதிமன்ற திறப்பு விழாவில் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கிறேசியன் அலெக்ஸ் ராஜா, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சைலன் காயத்திரி, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மத் ஜமில், சிறுவர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் நிஞ்சினி ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.