நாட்டுக்கு எதிராக ஜெனிவா ஊடாக வெளியில் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை இடம்பெற்றுவருவதாகவும் அதற்கு தமது முழுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் வெளி நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தீர்ப்புகளை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை பாராளுமன்றத்தில்
நேற்று முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நமது நாட்டின் இராணுவத்தினரை நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. எமக்கு மூளை சரியில்லை என்று நினைக்க வேண்டாம்.
ஜெனிவா ஊடாக வெளியில் ஆதாரங்களைத் திரட்டும் பொறி முறை இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் என்ற வகையில் நாம் அதனை முழுமையாக எதிர்க்கிறோம்.
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு இலங்கையில் மாத்திரமல்ல சுமார் 43 நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு உள்நாட்டில் தீர்வு காண்பதே எமது நோக்க மாகும். ஆதலால் வெளிநாட்டு தலையீடுகளை நிறுத்த வேண்டியுள்ளது.
இந்த விடயத்தில் தண்டிப்பதற்கான அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. இது பற்றிஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றே குறிப்பிடுகிறோம்.
அரசியலமைப்பின் பிரகாரம்உள்நாட்டிலேயே பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்குஎதிர்ப்பு தெரிவிப்பதானால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் – என்றார்.