செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.