மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீது தாக்குதல் – 48 பேர் விடுதலை!

மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீது தாக்குதல் - 48 பேர் விடுதலை!

editor 2

கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார நீதிவான் நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் தீர்ப்புக்காக மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேகநபர்களில் நால்வர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 வருடங்களாக நடை பெற்று தற்போது விசாரணைகள் யாவும் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த
ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து ஒரு மாத காலத்துக்குள் எதிர்த்தரப்பு
சாட்சியங்களுக்காக ஏற்கனவே தவணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த 4 சந்தேக நபர்களுக்குமான தீர்ப்பு வழங்க மன்று ஒத்திவைக்கப்
பட்ட நிலையில், மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த
4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க
நீதிவான் உத்தரவிட்டார்.

வாடி தொடர்பான உரிமை விடயத்தில் முஸ்லிம் – தமிழ் கடற்றொழிலாளர்களிடைய நடந்த வழக்கில் சாராரும் மோதியிருந்தனர். இதனுடன் தொடர்புடைய 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article