உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை குறித்து கவலைப்படவில்லை – ஜனாதிபதி ரணில்!

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை குறித்து கவலைப்படவில்லை - ஜனாதிபதி ரணில்!

editor 2

2023 இல் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை குறித்து தான் கவலைப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் என்கின்ற போதிலும்,நான் அதற்காக கவலைப்படவில்லை,ஏனென்றால் அந்த நேரம் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பதற்கான உரிமை வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article