எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.
கொழும்பு – ஹுணுப்பிட்டிய கங்காராமை விகாரையில் இன்று மாலை இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும், அமைச்சர்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.