பல நூற்றாண்டுகளாக கோணேஸ்வரர் ஆலயத்தில் காணப்பட்ட அம்மன் தாலி திருடப்பட்டது!

பல நூற்றாண்டுகளாக கோணேஸ்வரர் ஆலயத்தில் காணப்பட்ட அம்மன் தாலி திருடப்பட்டது!

editor 2

பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில்  இருந்து  வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால்  பல உயிர் தியாகங்கள்  செய்யப்பட்டு  காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த  நிலையில், கடந்த வாரம் இந்த தாலி பகலில்  திருடு போய் உள்ளது. 

இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கினர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரண் தாலி  பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்தனர். 

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் இதுவரை பொலிஸில் முறைப்பாடு கூட செய்யவில்லை.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுண் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு  போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்விடயம்  குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.   பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விடயம் குறித்து ஆளுநர்  செந்தில் தொண்டமானை சந்தித்து   பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆளுநர் தாலியை  உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்  பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share This Article