திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிவப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது இயற்கை அனர்த்தம் எதாவது நிகழ்வதற்கான முன்கூட்டிய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.