நல்லூரானுக்கு இன்று கொடி!

நல்லூரானுக்கு இன்று கொடி!

editor 2

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகின்றது.

இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திரு விழாவும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 6.45
மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து 23ஆம் திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு சப்பைரதத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தேர்த் திருவிழாவும் அடுத்தநாள் செப்ரெம்பர் 2ஆம் திகதியான திங்கட்கிழமை காலை 15 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும்
நடைபெறவுள்ளன.

Share This Article