வடக்கின் ஒரு பகுதி இளைஞர்கள் காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக் கையை கைவிட்டுள்ளனர் என்று கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ எம். பி., அரச
மைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை பொதுஜன பெரமுன கட்சி எதிர்க்கிறது என்றும் கூறினார்.
தெற்கில் கூறுவதைப் போன்றே வடக்குக்கு சென்றும் நான் கூறுகின்றேன்.
சில தரப்பினரை போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை. இதனால், வடக்கின் சில அரசியல் கட்சிகளால் எம்முடன் இணைந்து செயல்பட முடியவில்லை. வடக்கின் ஒரு பகுதி இளைஞர்கள் காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ளனர். தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தற்போது எம்முடன் இணைந்துள்ளார்கள்.
எதிர்வரும் தேர்தல்களில் வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவதே எனது இலக்கு. அவ்வாறு தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம். ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ – ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம் என்றும் தென்னிலங்கை ஊடகம் ஒன்
றுக்கு வழங்கிய நேர்காணலில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.