17 வயதுக்குள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ய நடவடிக்கை!

17 வயதுக்குள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ய நடவடிக்கை!

editor 2

மாணவர்கள் 17 வயதுக்குள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதற்கு வசதியாக கல்வி சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்த நடைமுறை 2025ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால், பாடசாலைகளிலுள்ள தரங்கள் 13இலிருந்து 12ஆகக் குறைக்கப்படும்.

இவ்வாறு கல்வி சீர்திருத்தக் குழு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

அத்துடன், தகவல் தொழில்நுட்பம் பாடத்தை கட்டாய பாடமாக்கவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளை வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் போட்டியை குறைக்கவும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களை 09 இலிருந்து 07 ஆகக்குறைக்கவும் விதந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share This Article