சில மாதங்களில் வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வு!

சில மாதங்களில் வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வு!

editor 2

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாகத் தளர்த்தப்பட்டது.

இதன்படி, அடுத்த சில மாதங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஏனைய வாகன
இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும். பொருளாதார சீர்திருத்தங்களால் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் அந்நிய செலாவணி வளர்ச்சியடைந்ததால் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கமுடிந்தது.

அரசாங்கம் விரும்பிய இலக்குகளை அடைய முடிந்தது எனவும் நிதியமைச்சு
கூறியுள்ளது.

இந்நிலையில், காலவரையின்றி அதிகரித்துள்ள வாகனங்களின் விலை, வாகனங்கள் இறக்குமதியால் 60வீதம் வரை யில் குறைவடையும் என்று
வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Share This Article