தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலிகளைப் பிரித்தது போன்று மொட்டுக் கட்சியினரையும் பிளவுப்படுத்தியதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதில் மிகவும் கைத்தேர்ந்தவர்.
அவர் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தினார்.
அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையேயையும் பிளவை ஏற்படுத்தினார்.
நாட்டின் நலன் கருதி நாங்கள் அரசியல் தீர்வொன்றை எட்டவுள்ளோம்.
தமது கட்சிக்குப் பொருந்தாத விடயங்களுக்கு இணங்கும் ஜனாதிபதியோ அல்லது வேறு எவராகவிருந்தாலும் அவருடன் இணங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.