எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் .ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் அது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரைக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பின் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைய, பொலிஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாகாத பின்னணியில், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு கிடையாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.