பங்களாதேஷில் வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில் இலங்கையை சேர்ந்த மாணவர்கள் 50இற்கும் மேற்பட்டோர் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளனர்.
பங்களாதேஷில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இணைய, தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாக்காவிலும் சிட்டகொங்கிலும் பல்கலைகழகங்களில் சிக்குண்டுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரும் கடிதங்களை இலங்கை மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைகழகங்களுக்கு பங்களாதேஷூக்கான
இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி அனுப்பிவைத்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தூதுவர் தொடர்பிலிருக்கின்றார் என்று வெளி விவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.