சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் வெளியேறினார்!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் வெளியேறினார்!

Editor 1

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்த போதிலும் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்பட்டதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

புதிய பதில் அத்தியட்சகராக அமைச்சு அனுமதியுடன் வடக்கு திணைக்களம் நியமித்திருக்கிற போதிலும் வைத்தியர் அர்ச்சனாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு கடிதமும் இதுவரை வழங்கப்படவில்லை என்று வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்துமீறி காணொளி எடுக்க முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே,

வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா,

நாளை சுகாதார அமைச்சர் உட்பட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருகின்றனர் என்றும் வைத்தியசாலை தொடர்பிலான முறைப்பாடுகளைக் கையளிக்குமாறும் அவர் அங்கிருந்த மக்களைக் கோரியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைத்தியருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article