தேர்தலுக்குத் தேவையான நிதி உள்ளது – தேர்தல்கள் ஆணையாளர்!

தேர்தலுக்குத் தேவையான நிதி உள்ளது - தேர்தல்கள் ஆணையாளர்!

Editor 1

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்ஆணைக்குழு சட்டரீதியான நிதிரீதியான தடங்கல்களை எதிர்கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான மற்றும் நிதிரீதியான தடைகள் காணப்படுகின்றமையினால் ஜனாதிபதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியுமா என பலதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தேவையான நிதிகள் எங்களிடம் உள்ளன மேலும் தேர்தல்தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எங்களிற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து சட்ட அமுலாக்கல் தரப்பின் அதிகாரிகள் மற்றும் தொடர்புபட்டஏனைய தரப்புடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 17 ம் திகதி நிதியமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14 ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர் மாதஇறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.

Share This Article