நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானவை – இவ்வாறு 4 ஆயிரம் பிக்குகள் மத்தியில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க.
அமரபுர மகா நிக்காய ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வு நேற்று காலியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறுகூறினார்.
அங்கு அவர் தெரிவித்தவை வருமாறு,
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது.
நீண்டகாலமாக பேணப்பட்ட இறக்குமதி பொருளாதார கொள்கையால் அந்த நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், மற்றைய அனைத்து தேரவாத பௌத்த நாடுகளும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன.
எனவே, நாட்டில் புதிய பொருளா தார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை புதிய பாதைக்குக் கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானவை – என்றார்.