வரலாற்று பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதிசாமி குருக்கள் சுதர்சனக் குருக்கள் தனது 76 ஆவது வயதில் நேற்று
செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்
பிரதம குருவாக இறை பணியாற்றியுள்ளார்.
துன்னாலை மத்தி, கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஆவரங்கால் சிவன்கோயிலடியை வதிவிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.