முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில் 3 மாதங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை (IVIG) கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னணியில், ஜூன் 19ஆம் திகதி, ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.