2025 ஆண்டே ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிறார் ஜனாதிபதி ரணில்!

2025 ஆண்டே ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிறார் ஜனாதிபதி ரணில்!

editor 2

2025 ஆகும் பொழுது நிச்சயம் ஆசிரியர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க முன்னர் ஏனைய அசர ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

நேற்று கண்டியில் மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற்றபின்னரே ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல், ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது.

அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்னைகளை உருவாக்கும்.

2025ஆம் ஆண்டு ஆகும்போது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் – என்றும் ஜனாதிபதி கூறினார்.

Share This Article