இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார் பேராயர்
கர்தினால் மல்கம் ரஞ்சித்.
கேகாலை – ருவன்வெல்லவில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உத்தேச பாலத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பெரும் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
இவ்வாறு பாலம் அமைப்பதன் ஊடாக 2 ஆயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் இல்லாமல் போகக் கூடும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும். அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும் – என்றும் அவர் கூறியுள்ளார்.