மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை இலங்கை அரசு மீண்டும் நிராகரித்தது!

மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை இலங்கை அரசு மீண்டும் நிராகரித்தது!

editor 2

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் பணி இறையாண்மை – சமத்துவம் – பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தல் – தலையீடு செய்யாமை போன்ற கோட்பாடுகளால் வழிநடத்தப்படவேண்டும்.

ஒரு தலைப்பட்சமான ஆணைகளைப் பின்பற்றுவது இந்தக் கோட்பாடுகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது – மனித உரிமைகள் பிரச்னைகளில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்று ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட தூதரகத்தின் ஆலோசகர் டிலினிலெனகல தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அறிக்கை ஒன்றை வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மனித உரிமைகள் பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறி முறை பயனற்றது.

இலங்கையில் சமூகங் களை பிரிக்கவும் – துருவமயப்படுத்த வும் மாத்திரமே அது உதவும். மேலும், இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவு மில்லை. உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன் கூட்டியே தீர்மானம் செய்கின்றது – உறுப்புநாடுகளின் வளங்களை வீணடிக்கின்றது.

உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமைகள் சூழ்நிலைகளை பாரபட்சமற்றவிதத்தில், தேர்ந் தெடுக்கப்படாத தன்மையுடன் புறநிலையுடன் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்து மதிப்பிடவேண்டும்.

இந்த கோட்பாடுகளுக்கு முரணான தன்னிச்சையான செயல்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது.

மேலும், ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனையை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மனித உரிமைகள் பேரவையின் பணியானது இறையாண்மை – சமத்து வம் – பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தல் – தலையீடு செய்யாமை போன்ற கோட்பாடுகளால் வழிநடத்தப்பட வேண்டும்.

ஒருதலைப் பட்சமான ஆணைகளைப் பின்பற்றுவது இந்தக் கோட்பாடுகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது – மனித உரிமைகள் பிரச்னைகளில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கிறது – என்றும் லெனகல கூறினார்.

Share This Article