உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல தரப்பினர்
வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கத்தோலிக்க திருச்சபை முற்றாக நிராகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே திருச்சபை 500 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த தெரிவித்தார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக சேவை பிரிவான செத்சரன மூலம் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளோம். நாங்கள் செய்யும் உதவிகள் குறித்து எவருக்கும் தெரிவிப்பதில்லை எனவும் அவர் கூறினார்.