ராஜபக்சக்கள் இல்லாத கூட்டணிக்கு ஆதரவில்லை – பஷில்!

ராஜபக்சக்கள் இல்லாத கூட்டணிக்கு ஆதரவில்லை - பஷில்!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாராகும் ராஜபக்சக்கள் இல்லாத புதிய அரசியல் கட்சி தொடர்பில் பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடனான விசேட சந்திப்பின் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ராஜபக்ஷக்கள் இல்லாத மொட்டுக்கட்சியினர் சிலர் கூட்டணி அமைப்பது தொடர்பில் பிரசன்ன ரணதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

குறித்த கூட்டணி சார்ந்த எந்த ஒரு நிகழ்வுகளிலிலும் ராஜபக்சக்களை இணைத்துக் கொள்வதில்லை என பிரசன்னரணதுங்க, ரணில் விக்கிர மசிங்கவிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில இது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க மற்றும் பஸில் ராஜபக்ஷ இடையிலான சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மொட்டுக்கட்சியின் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் சுதந்திர கட்சியின் சில அங்கத்தவர்கள் கலந்து கொண்டதாகவும், இந்த செயற்பாடானது திருப்திகரமானதாக அமையவில்லை என பஸில் ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பானது அவர் விடுத்த அழைப்பின் பேரிலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் ராஜபக்ஷக்கள் எவருக்கும் அடிபணிய தயாரில்லை எனவும் கடுமையான கருத்துக்களை பசில் இதன் போது
முன்வைத்துள்ளார்.

எனினும் மொட்டுக் கட்சியினரையோ, வேறு கட்சியினரையோ இணைத்துக்கொள்வது ஜனாதிபதியின் தனிப்பட்ட அரசியல் முயற்சியாக இருந்தாலும் ராஜபக்ஷக்கள் இல்லாத எந்த ஒரு கூட்டணிக்கும் ஆதரவளிக்கப்
போவதில்லை என பசில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Share This Article