பிறரின் கைபேசிகளைப் பயன்படுத்தி பண மோசடி! சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

பிறரின் கைபேசிகளைப் பயன்படுத்தி பண மோசடி! சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

editor 2

பிறரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த சந்தேக நபரை ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரான ஹட்டனைச் சேர்ந்தவர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் குற்றவியல் கண்காணிப்புப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான் திலின கமகே, வழக்கு விசாரணைகளை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுடன் ஏ.ஏ.எல். ஜயரத்னராஜா சந்தேக நபருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள்.

Share This Article