4 வயது சிறுமியை மிலேச்சத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிறைச்சாலை வளாகத்திற்குள் குறித்த நபர் தாக்கப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளர் நாயகமுமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் அவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெலிஓயா பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை மிலேச்சித்னமாக தாக்கிய சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றினால் உத்தரவிட்டப்பட்ட்டது.