வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தடை!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தடை!

Editor 1

வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பொது மக்கள் செல்வதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது. அந்தப் பிரதேசங்களில் வெடிபொருட்கள் காணப்படுகின்றன என்று தெரிவித்தே இந்தத் தடையை இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பில் விடுவிக்கப்பட்ட வயாவிளான், பலாலி பிரதேசங்களின் 234 ஏக்கர் காணிகள் – ஜே/244, ஜே /245,ஜே /252, ஜே /253, ஜே/254 ஆகிய கிராம சேவகர் பகுதிகளுக்கே பொதுமக்கள் செல்லத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு ஆளுநரின் தலையீட்டைத் தொடர்ந்து அண்மையிலேயே பாதைகள் திறந்து விடப்பட்டன. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் வெடிபொருட்கள் காணப்படுகின்றன என்று கூறி காணிகளின் உரிமையாளர்கள்
அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Share This Article