இராணுவத்தினர் 15 ஆயிரம் பேர் சட்டரீதியாக வெளியேற்றப்படுகின்றனர்!

இராணுவத்தினர் 15 ஆயிரம் பேர் சட்டரீதியாக வெளியேற்றப்படுகின்றனர்!

Editor 1

பொது மன்னிப்பு காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15 ஆயிரத்து 667  இராணுவத்தினர் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 அம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தின் 2023 டிசம்பர் 31, மற்றும் அதற்கு முன் விடுமுறை இன்றி பணிக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இராணுவத்தினர் 15667 பேர் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளனர்.

மேலும், மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் அனுமதி இன்றி கடமைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவத்தைச் சேர்ந்த 373 பேர் இராணுவத்தை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share This Article