நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்றும் நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேகாலையில் உருவாக்கப்பட்ட பசுமை இல்லத்தை பார்வையிட சென்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.