திருகோணமலை சம்பூர் பொலிஸ்பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிஸார் மிரட்டிய சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சேனையர் பகுதியில் நேற்று மதியம் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காட்டி அச்சுறுத்தி தடுக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதன்போது நாங்கள் வேறு யாரையும் நினைவு கூரவில்லை. உயிரிழந்த
பொது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்ற தடை உத்தரவை வாங்க மறுத்ததாகவும் தெரியவருகின்றது.
எனினும் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவு கூர்ந்திருந்தனர்.