சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள் தயாரிப்பில் சிக்கல்?

சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள் தயாரிப்பில் சிக்கல்?

Editor 1

நடைபெற்றுவருகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பாடத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சினால் சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் விதிமுறைகள் தொடர்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விஞ்ஞான பாட வினாத்தாளில் 3 பல்தேர்வு வினாக்களும், 3 கட்டுரை வினாக்களின் 4 பகுதிகளும் பாடத்திட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக மாணவர்களும் ஆசியரியர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Share This Article