வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்ற ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாட்டில் வாழும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர், காணி உறுதிப் பத்திரத்தை உள்ளூரிலுள்ள ஒருவரிடம் 12
இலட்சம் ரூபாய்க்கு ஈடுவைத்து பணம் பெற்றுள்ளார்.
இதனை அறிந்த வெளிநாட்டில் வசிக்கும் காணி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் முறைப்பாடு செய்ததை அடுத்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து சந்தே கநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.