தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முடியாமல் போனமை வருத்தமளிக்கிறது’ – இவ்வாறு கூறியுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவரும் ஜனாதிபதி ரணிலின் சர்வதேச காலநிலை ஆலோசகருமான எரிக் சொல் ஹெய்ம், ’13ஆவது அரசமைப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரச்னையை தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய
வேண்டும்’, என்றார்.
அண்மையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம் பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினார். இந்தப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு சிங்கள, முஸ்லிம் மக்களின் ஆதரவு அவசியம். 13ஆவது அரசமைப்பு திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்னையை தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டும். இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும். 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்தந்த மாகாண மக்கள் தமது அதிகாரங்களை பிரயோகிக்கமுடியும் – என்றும் தெரிவித்தார்.