அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக் குழு பரிசீலித்து வருகிறது.
செப்ரெம்பர் 28 அல் லது நவம்பர் 05 ஆகிய இரண்டு திகதிகள் தற் போது பரிசீலனை மட்டத்தில் உள்ளன.
இந்த இரண்டு திகதிகளில் தேர்தலை நடத்த வேண்டு மென்றால் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் முதல்கட்ட அறிவிப்புகளை தேர்தல்கள் ஆணைக் குழு வெளியிடவேண்டும். தேர்தலுக்கான தயார் படுத்தலின் ஒருகட்டம் தான் அவசர அவசரமாக ஆளுநர் பதவிகளில் ஜனாதிபதி மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.