சாதாரண தரப் பரீட்சை; பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை!

சாதாரண தரப் பரீட்சை; பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை!

Editor 1

நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு 12 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இப்பரீட்சை தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இவ்வாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் உயர்தர வகுப்புகளுக்கு பிரவேசிப்பதிலும் உயர்தரத்துக்கான பாடங்களை தெரிவு செய்வதிலும் மாணவர்களை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொல கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். 

Share This Article