ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இந்த சந்திப்பு தீர்க்கமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றது. ஆனாலும் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தொடர்ச்சியாக கூறி வருகின்றமையும் இங்கு சுட்டிகாட்டத்தக்கது.