அபிவிருத்தி உத்தியோகத்தரான இளம் குடும்பப்பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – சகாயபுரம் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டது. குறித்த பெண் தண்ணீர் எடுக்க முற்பட்டபோது வலிப்பு ஏற்பட்டதால் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் நீண்டகாலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இது இயற்கை மரணமா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய 37 வயது பிரதீபன் நித்யா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார்.