ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்த மாதம் இலங்கை வரவுள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோமீற்றர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும் எதிர்வரும் 24ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவே அவர் இலங்கை வருகிறார்.
ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய சேவை உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டம் இலங்கையின் தென் கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் ஈரானிய ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டங்களில் இந்தத் திட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.