பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த பெண் மரணம்! கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்!

பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த பெண் மரணம்! கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்!

editor 2

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும தெரியவருவதாவது,

பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article