வாகன இறக்குமதி மீதான தடைகள் எதிர்வரும் 2025 இல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இவர் இதனைத் கூறினார்.
தற்போது சுற்றுலாத்துறைக்காக பேருந்துகள் மற்றும் சிறய ரக பேருந்துகளின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2 வருடங்களாக பொருளாதார நெருக்கடிக் காலங்களில் விதிக்கப்பட்டிருந்த பல
கட்டுப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தளர்த்தியுள்ளதாக சியம்பலாபிட்டிய
சுட்டிக்காட்டினார்.