பொன்னாவெளியில் எதிர்த்தவர்கள் குடிகாரர்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

பொன்னாவெளியில் எதிர்த்தவர்கள் குடிகாரர்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

editor 2

‘புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனாலேயே என்னைத் துரத்த முடியவில்லை என்ற நிலை இருக்கும் போது சில குடிகாரர்களால் என்னை எவ் வாறு துரத்த முடியும்?’, இப்படி கூறியிருக்கிறார் ஈ. பி. டி. பியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா.

பூநகரி – பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நிலைமையை ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.

அங்கு போராட்டக்கார்களுடன் பேச்சில் சுண்ணக்கல் அகழ்வில் சாதக, பாதக தன்மை தொடர்பில் ஆராய சென்றபோது அங்கிருந்தவர்கள் யாரும் கதைக்கக்கூடிய நிலையில் இருந்திருக்கவில்லை. சிலர் தமது அரசியலுக்காக வந்தார்கள். மற்றையவர்கள் போதையில் நின்றார்கள். அவர்களுடன் கதைக்க முடியாது எனத் திரும்பிவந்தேன். மீண்டும் செல்வேன். மக்களின் வாழ்வாதரத்துக்காக தொடர்ந்து பயணிப்பேன். பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்குப் பாதிப்பு வருமென ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படமாட்டாது. மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கிடைத்தால், அகழ்வுப் பணிகளுக்கான நடவடிக் கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் – என்றும் கூறினார்.

Share This Article