பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு சீனாவுடன் இணைந்து இலங்கை, ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சிகளின் மூலம், தேயிலை பயிர்ச்செய்கையில் சிறந்த விளைச்சளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.