ஐக்கிய மக்கள் சக்தி என்பது மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை உள்வாங்காமல் உருவாக்கப்பட்ட கட்சி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை கட்சி தவிர்த்துக்கொண்டது அவர்களை உள்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சூத்திரதாரிகளை வெளியேற்றிய பின்னரே எங்கள் கட்சி தனது பயணத்தை ஆரம்பித்தது என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச எங்கள் கட்சியின் பயணம் ஜனாதிபதி பதவிக்கானதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கானதோ இல்லை இலங்கை மக்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்தைய குற்றச்சாட்டுகளிற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.